கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட மறைக்கோட்ட இளையோருக்கான கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி மார்கழி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தில் நடைபெற்றது.

மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்போட்டியில் கிளிநொச்சி மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 07 குழுக்கள் பங்குபற்றியிருந்தன.

இப்போட்டியில் இரணைமாதாநகர் பங்கு முதலாமிடத்தையும் பூநகரி பங்கு இரண்டாமிடத்தையும் குமிழமுனை பங்கு மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.

அத்துடன் இளவாலை மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட மறைக்கோட்ட இளையோருக்கான கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி மார்கழி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட பாடசாலையில் நடைபெற்றது.

மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்போட்டியில் இளவாலை புனித யூதாததேயு ஆலயம் முதலாமிடத்தையும் ஆனைக்கோட்டை பங்கு தேவர்கட்டு திருஇருதயநாதர் ஆலயம் இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.

By admin