யாழ். புனித மரியன்னை பேராலய அன்பியங்கள் இணைந்து முன்னெடுத்த அன்பிய கரோல் வழிபாடு மார்கழி மாதம் 16ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 16 அன்பிய குழுக்கள் இணைந்து கரோல் கீதங்களை வழங்கியிருந்தனர்.
இந்நிகழ்வில் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி நிதி முகாமையாளர் அருட்தந்தை பிரான்சிஸ் டினேசன் அவர்கள் அருளுரை வழங்கியதுடன் சுண்டுக்குளி பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்கள் இறுதி ஆசீரையும் வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்களென பலரும் கலந்துசெபித்தனர்.

