குருநகர் புனித யாகப்பர் ஆலய பக்தி சபைகள் இணைந்து முன்னெடுத்த கரோல் வழிபாடு மார்கழி மாதம் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில பக்தி சபைகள் கரோல் கீதங்களை வழங்கியதுடன் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செபஸ்ரியன் அவர்கள் அருளுரையையும் வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்களென பலரும் கலந்துசெபித்தனர்.

