கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கள யாழ். மாவட்ட செயலக அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்ட சர்வமத கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் மார்கழி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புங்குடுதீவு பங்கில் நடைபெற்றது.

புங்குடுதீவு பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் தலைமையில் தரிசனம் கல்வி நிலைய மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகள், சர்வமத தலைவர்களின் ஆசியுரைகள் என்பவற்றுடன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள், பங்குமக்கள், திணைக்கள பணியாளர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin