இளவாலை மறைக்கோட்ட இறைமக்கள் இணைந்து பதுளை மாவட்டத்தில் டிட்வா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு தொகுதி நிதி உதவியை அண்மையில் வழங்கியுள்ளனர்.
இன மத மொழி பேதங்கள் கடந்து பாதிக்கப்பட்ட மக்களுடன் தமது தோழமையையும், அக்கறையையும், உடனிருப்பையும் வெளிப்படுத்தும் முகமாக பண்டத்தரிப்பு, இளவாலை, போயிட்டி, சில்லாலை பங்கு மக்கள் இணைந்து மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுத்த இந்நிகழ்வில் பங்குத்தந்தையர்களும் மறைக்கோட்ட முதல்வரும் பதுளை மாவட்டத்தை தரிசித்து அங்கு பசறை, துணுகல மற்றும் மடுல்சீம பிரதேசங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு 18 இலட்சம் ரூபாய் பணத்தொதையை வழங்கிவைத்தார்கள்.
இந்நிகழ்வில் கிளறேசியன் சபை அருட்தந்தை வரதன், உரும்பிராய் பங்கின் வின்சன்டி போல் பந்தி தலைவர் திரு. றொசான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

