சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட கரோல் வழிபாடு மார்கழி மாதம் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 06 அன்பிய குழுக்களும் பாடகர் குழாமினரும் ஆலயத்தில் பணியாற்றும் கார்மேல் கன்னியர் சபை அருட்சகோதரிகளும் இணைந்து கரோல் கீதங்களை வழங்கியதுடன் திருவுளப்பணியாளர் சபை அருட்தந்தை பிராங் டவ் அவர்கள் அருளுரையையும் யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்கள் இறுதி ஆசீரையும் வழங்கினர்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்களென பலரும் கலந்துசெபித்தனர்.

By admin