கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஒளிவிழா மார்கழி மாதம் 09ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கலாசாலை ரதிலக்ஸ்மி மண்டபத்தில் நடைபெற்றது.

கலாசாலை கிறிஸ்தவ மன்றத்தின் ஒழுங்குபடுத்தலில் அதிபர் திரு. சந்திரமௌலீசன் லலீசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து கலைநிகழ்வுகளும் ஒளிவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற ஆசிரிய மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன.

திருப்பலியை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

கலைநிகழ்வில் இடம்பெற்ற கவி அரங்கை விரிவுரையாளர் கவிஞர் வேல் நந்தகுமார் அவர்களும் நாடக ஆற்றுகையை விரிவுரையார் சந்திரிகா தர்மரட்ணம் அவர்களும் நெறிப்படுத்தியதுடன் இந்நிகழ்வில் பலாலி ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் அதிபர் திரு. இக்னேசியஸ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

By admin