டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவிகளை வழங்கி வரும் நிலையில் அவர்களின் மருத்துவ தேவையைக் கருத்தில் கொண்டு, மன்னார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் ஒரு தொகுதி மருத்துவ பொருட்களை வழங்கியுள்ளார்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் மார்கழி மாதம் 09ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அஸாத், வைத்தியர் ரூபன் லெம்பேட் மற்றும் மருத்துவமனை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் கலந்து ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவப் பொருட்களை பெற்றுக்கொண்டனர்.
