முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச சபைக்குட்பட்ட முத்தையன்கட்டு இடதுகரையில் இயங்கிவரும் வானவில் ஊற்று சிறுவர் கழகத்தில் கல்வி பயின்றுவரும் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் குடும்பத்தினருக்கு ஒரு தொகுதி உதவிப்பொருட்கள் 10ஆம் திகதி கடந்த புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கழக ஸ்தாபக இயக்குநர் திரு அமிர்தநாதன் சுதாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 90 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்களும் கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இப்பொருட்களுக்கான நிதியனுசரணையை வைத்தியர் விமல் ஜெயரட்ணம் அவர்கள் வழங்கியிருந்தார்.

