இலங்கை கிறிஸ்தவ மத அலுவலகள் திணைக்களத்தால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நத்தார் தபால் முத்திரை சித்திரப்போட்டி மற்றும் கரோல் பாடல் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு மார்கழி மாதம் 09ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பொறளை புனித அலோசியஸ் சிறிய குருமடத்தில் நடைபெற்றது.

இலங்கை கிறிஸ்தவ மத அலுவலகள் திணைக்கள பணிப்பாளர் திருமதி சதுரி பிந்து அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வெற்றிபெற்றவர்களுக்கான விருதுகளும், சான்றிதழ்களும், பணப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அரச உத்தியோகத்தர்கள், மத தலைவர்கள், திணைக்கள பணியாளர்கள், போட்டியாளர்களென பலரும் கலந்து கொண்டனர்.

தேசிய ரீதியில் நடைபெற்ற நத்தார் தபால் முத்திரை சித்திரப்போட்டியில் 1800 போட்டியாளர்களும் கரோல் பாடல் போட்டியில் சிங்கள மொழி மூலம் 49 அணிகளும், தமிழ் மொழி மூலம் 15 அணிகளும் பங்குபற்றியிருந்தன.

By admin