நாவாந்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட கரோல் வழிபாடு மார்கழி மாதம் 11ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை புனித பரலோக அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை டினூசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புனித பரலோக அன்னை மற்றும் புனித நீக்கிலார் ஆலயங்களின் பக்தி சபைகள் இணைந்து கரோல் கீதங்களை வழங்கியதுடன் டிட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இறைவேண்டலையும் மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்களென பலரும் கலந்துசெபித்தனர்.

