மட்டக்களப்பு மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை சாந்தன் இம்மானுவேல் அவர்கள் மார்கழி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

கண்டி, அம்பிட்டிய தேசிய குருத்துவக் கல்லூரியில் மெய்யியல் கற்கையையும் இந்தியா தமிழ்நாடு திருச்சிராப்பள்ளி புனித பவுல் குருத்துவக் கல்லூரியில் இறையியல் கற்கையையும் நிறைவுசெய்த இவர் 1979ஆம் ஆண்டு திருகோணமலை – மட்டக்களப்பு மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

இவர் ஆயித்தியமலை சதாசகாய அன்னை திருத்தலம், செங்கலடி புனித நிக்கலஸ் ஆலயம்;, வாகரை புனித பேதுரு ஆலயம், வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலயம், வாழைச்சேனை புனித திரேசாள் ஆலயம், மூதூர் புனித அந்தோனியார் ஆலயம், அக்கரைப்பற்று புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், கல்குடா புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், தாழங்குடா புனித திருமுழுக்கு யோவான் ஆலயம், குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம் போன்ற பங்குகளில் பங்குத்தந்தையாக பணியாற்றியதுடன் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் பல்வேறுபட்ட இன்னல்களுக்கு மத்தியிலும் மக்களுக்கான தனது பணியில் தம்மையே முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டார்.

அத்துடன், பிள்ளைகளின் கல்வியில் அதிக நாட்டம் கொண்டு வறிய மாணவர்களுக்கு உதவி புரிவதிலும், இல்லங்களை அமைத்து அவர்களுக்கான தேவைகளைப் பூர்த்திசெய்து, அவர்களின் கல்வியில் அக்கறைகொண்ட இவர் 46 ஆண்டுகளுக்கு மேலாக மட்டக்களப்பு, திருகோணமலை மறைமாவட்டங்களில் பணியாற்றியுள்ளார்.

இவரின் பணிவாழ்விற்காக நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin