டிட்வா புயல் தாக்கத்தால் இலங்கையில் உருவான வெள்ளப்பெருக்கு, மண்சரிவு அனர்த்தங்களால் உயிரிழந்த, மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை மனதில் கொண்டு வருகின்ற கிறிஸ்து பிறப்பு விழாவை அமைதியுடனும் அர்த்தமுள்ள வகையிலும் கொண்டாடுமாறு யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் இறைமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

பொருத்தமற்ற ஆடம்பரங்களை தவிர்த்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்து, பாலன் இயேசு கொண்டுவந்த அமைதி விடுதலை ஆகிய நற்செய்திகளை மக்களுக்கு அறிவித்து, துன்புறும் மக்களோடு ஒன்றிணைந்த உள்ளங்கொண்டு கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடுமாறு மேலும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

By admin