டிட்வா புயலின் தாக்கத்தால் இறந்த, காணாமல் போன மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பாதுகாப்பையும் இறையருளையும் வேண்டி பதுளை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட சர்வமத வழிபாடுகள் மார்கழி மாதம் 05ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை அங்கு இடம்பெற்றன.

தேவாலயங்கள், கோவில்கள், பள்ளிவாசல்கள் மற்றும் விகாரைகளில் இடம்பெற்ற இவ்வழிபாடுகளில் உரோமைத் தலைமைப்பீடத்தின் மதங்களுக்கிடையேயான உரையாடலுக்கான பேராய அங்கத்தவரும் பதுளை மறைமாவட்ட ஆயருமான பேரருட்தந்தை யூட் நிஸாந்த சில்வா அவர்கள் கலந்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக இறைவேண்டலில் ஈடுபட்டார்.

By admin