யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட புனித பிரான்சிஸ் சவேரியார் திருவிழா கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மார்கழி மாதம் 03ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், ஆசிரியர்கள்;, குருமாணவர்களெனப் பலரும் கலந்துகொண்டதுடன், டிட்வா புயல் அனர்த்தால் பாதிக்கப்பட்ட மக்களுடனன ஒன்றிப்பை வெளிப்படுத்தி அன்றைய தினம் மாலை நடைபெறவிருந்த நிகழ்வுகள் நிறுத்தப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin