டிட்வா புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மன்னார் கரித்தாஸ் வாழ்வுதயம் நிறுவனம் உதவிகளை வழங்கிவருகின்றது.
நிறுவன இயக்குனர் அருட்தந்தை அருள்ராஜ் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றுவரும் இந்நிகழ்வில் பேரிடர் காரணமாக இடம்பெயர்ந்து மன்னாரின் நானாட்டன், மடு மற்றும் மன்னார் நகர பகுதிகளிலுள்ள இடைநிலை நிவாரண முகாம்களில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து வயதுக்குட்பட்ட 300 குழந்தைகளுக்கு பால், சுகாதாரப் பொருட்கள் மற்றும் உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

