கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன.
தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமாக அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற இப்போட்டியின் தமிழ்மொழி மூலமான போட்டியில் யாழ்ப்பாணம் சுன்னாகம் பங்கு முதலாமிடத்தையும் மன்னார் பேசாலை வெற்றிநாயகி அன்னை ஆலயம் இரண்டாமிடத்தையும் மன்னார் யோசப்வாஸ் நகர் புனித சிசிலியா பாடகர் குழாம் மூன்றாமிடத்தையும் கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி நான்காமிடத்தையும் மன்னார் முருங்கன் புனித யாகப்பர் ஆலயம் ஜந்தாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.

