யாழ். அமலமரித் தியாகிகளின் யாழ் மாகாண நீதி சமாதான நல்லிணக்க பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஒரு தொகுதி பனம் விதைகள் நாட்டும் நிகழ்வு கார்த்திகை மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வலைப்பாடு பிரதேசத்தில் நடைபெற்றது.
பனை வளத்தை பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு முதலீடாக விட்டுச் செல்லும் இலக்குடனும் கார்த்திகை மாதத்தின் முக்கியத்துவத்தையும் அடையாளப்படுத்தும் நோக்குடனும் பணியக இயக்குனர் அருட்தந்தை ஜீவரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வலைப்பாடு பங்குத்தந்தை அருட்தந்தை எரோணியஸ் மற்றும் வலைப்பாடு புனித அன்னம்மாள் ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் உதவியுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் “இயற்கை எமது பொது இல்லம்” எனும் தலைப்பில் இளையோருக்கான கருத்தமர்வும் தொடர்ந்து வலைப்பாடு கிராமத்தின் வெளிகளிலும் வீதியோரங்களிலும் 2000 பனம் விதைகள் நடுகையும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் இளையோர் சமூக ஆர்வலர்கள், பணியக பணியாளர்களென 50 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin