அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ‘உறவுகள்’ நூல் வெளியீட்டு நிகழ்வு கார்த்திகை மாதம் 29ஆம் திகதி சனிக்கிழமை அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறை தலைவர் அருட்தந்தை போல் றொகான் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நூலுக்கான மதிப்பீட்டுரைகளை யாழ். போதனா வைத்தியசாலை உள மருத்துவ நிபுணர் திரு. சிவதாஸ், மற்றும் இலங்கை திருஅவை யாழ். குருமுதல்வர் திருவருட்பணியாளர் செல்வன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin