கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தின் ஏற்பாட்டில் இவ்வருடமும் தனி கரோல் பாடல் போட்டி நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சமூக வலைத்தளம் ஊடாக நடாத்தப்படும் இப்போட்டியில் வயது வேறுபாடின்றி விரும்பியவர்கள் பங்குபற்றமுடியும்.

பங்குபற்றுபவர்கள் 2.30 நிமிடங்கள் உள்ளடங்கலாக பாடலை பாடும்போது பக்கவாத்தியங்களை தவிர்த்து கையடக்க தொலைபேசியில் வீடியோ பதிவு செய்து பெயர், வயது, பங்கு போன்ற விபரங்கள் உள்ளடங்கலாக 074 162 6719 என்ற இலக்க WhatsApp செயலியூடாக மார்கழி மாதம் 04ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்க வேண்டும்.

போட்டியாளர்களின் வீடியோக்கள் யாழ் மறை அலை தொலைக்காட்சியின் Marai Alai Media You tube தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு நடுவர்களின் தீர்ப்போடு பார்வையாளர்களின் கருத்து, எண்ணிக்கைக்கு ஏற்ப வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள்.

By admin