திருச்சிலுவை கன்னியர்களால் நடாத்தப்படும் திருச்சிலுவை சுகநல நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 43ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு கார்த்திகை மாதம் 17ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
சுகநல நிலைய பொறுப்பாளர் அருட்சகோதரி அனுசலா அலெக்ஸாண்டர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்கள் விழா திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் அருட்சகோதரிகள், தாதியர்கள், பணியாளர்களென பலரும் கலந்துகொண்டனர்.

