புனித வின்சென்டி போல் சபையில் பணியாற்றி இறைபதமடைந்த ஆயர்கள், ஆன்மீக குருக்கள், பந்தி அங்கத்தவர்கள், மகிமை அங்கத்தவர்கள் மற்றும் உபகாரிகளை நினைவுகூர்ந்து ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலி கார்த்திகை மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை இன்று குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.
சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற திருப்பலியை கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை தேவராஜா ரவிராஜ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலி நிறைவில் சபையின் மாதாந்த கூட்டம் இடம்பெற்றதுடன் இக்கூட்டத்தில் புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு தொகையும் பந்திகளால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நுளம்பு வலைகளும் வழங்கிவைக்கப்பட்டன.
திருப்பலியில் மத்திய மத்திய சபை உறுப்பினர்கள், பந்நி உறுப்பினர்களென பலரும் கலந்துசெபித்தனர்.

