மன்னார் மறைமாவட்ட வவுனியா மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட 2026ஆம் ஆண்டிற்கான மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாடு கார்த்திகை மாதம் 15ஆம் திகதி கடந்த சனிக்கிழமை வேப்பங்குளம் புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

வவுனியா மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை டெஸ்மன் ஆஞ்சலோ அவர்களின் தலைமையில் ‘தூய ஆவியே எழுந்தருளி வாரும்’ என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில் 2026ஆம் ஆண்டு வவுனியா மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மேய்ப்புப்பணி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மன்னார் மறைiமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் மறைமாவட்ட மேய்ப்புப்பணி திட்டமிடல் குழு செயலாளர் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னான்டோ அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்புரைகள் வழங்கியதுடன், குழுஆய்வு, கலந்துரையாடல், பொது அமர்வு, ஆய்வுதிட்ட முன்மொழிவு என்பனவும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மறைக்கோட்ட பங்குத்தந்தையர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குகளின் பிரதிநிதிகளென 200 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin