மன்னார் மறைமாவட்டம் வவுனியா புனித ஆறாம் பவுல் ஆங்கில பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட பரிசளிப்பு விழாவுடன் இணைந்த ஒளிவிழா மற்றும் பாலர் பாடசாலை பட்டமளிப்பு நிகழ்வுகள் கார்த்திகை மாதம் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

உப அதிபர் அருட்தந்தை விமல்றோய் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அதிபர் அருட்தந்தை அருட்குமரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 2025ஆம் கல்வியாண்டில் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறப்புசித்தி பெற்றவர்களுக்கான கௌரவிப்பு, ஒளிவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில் வழங்கல், மற்றும் பாலர் பாடசாலையிலிருந்து தரம் ஒன்றிற்கு செல்லும் சிறார்களுக்கான பட்டமளிப்பு என்பவற்றுடன் மூன்று மொழிகளிலுமான கரோல் கீதங்கள், நாட்டுப்புற, மேலைத்தேய நடனங்கள், நாடகம் போன்ற கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் வவுனியா தெற்கு வலய மேலதிக கல்வி திட்டமிடல் பணிப்பாளர் திரு. ஜெனால்ட் அன்ரனி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டதுடன் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பெற்றோர், நலன்விரும்பிகளென பலரும் பங்குபற்றியிருந்தனர்.

By admin