யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்ப நல நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட உள ஆற்றுப்படுத்தல் டிப்ளோமா கற்கைநெறியை நிறைவுசெய்த 10ஆவது அணி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா கார்த்திகை மாதம் 15ஆம் திகதி சனிக்கிழமை நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

அகவொளி உதவி இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஜெராட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கற்கைநெறியை பூர்த்திசெய்த 13 மாணவர்கள் டிப்ளோமா சான்றிதழை பெற்றுக்கொண்டார்கள்.

யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் செல்வி தர்சினி உருத்திர கோடீஸ்வரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் யாழ். பல்கலைக்கழக உளவியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி. அபிராமி ராஜ்குமார் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

By admin