யாழ். மறைக்கோட்ட பங்குகளில் பணியாற்றும் பீட பணியாளர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வு கார்த்திகை மாதம் 11ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
பேராலய உதவிப்பங்குத்தந்தை கிளறேசியன் சபை அருட்தந்தை இதயராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைகோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பேராலய மண்டபத்தில் பீடப்பணியாளர்களுக்கான ஒன்றுகூடலும் தொடர்ந்து பேராலயத்தில் திருப்பலியும் நடைபெற்றன.
திருப்பலியை கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
ஒன்றுகூடல் நிகழ்வில் அருட்தந்தை றொனால்ட் சுஜீவன், அருட்தந்தை இதயராஜ், மற்றும் குருநகர் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்ரி ஞானராஜ் றொகான் ஆகியோரால் கருத்துரைகள் வழங்கப்பட்டதுடன் குழுச்செயற்பாடுகள், திருப்பலி உதவுமுறை பற்றிய விளக்கவுரைகள், என்பனவும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் 150ற்கும் அதிகமான பீடப்பணியாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

