மாங்குளம் பிரதேசத்தில் நல்லாயன் கன்னியர் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்படும் நல்லாயன் சிறுவர் இல்லத்தில் முன்னெடுக்கப்பட்ட கண்காட்சியும் பரிசளிப்பு நிகழ்வும் கார்த்திதை மாதம் 08ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
சிறுவர் இல்ல முகாமையாளர் அருட்சகோதரி சுமித்திரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுவர்களின் கைவண்ணத்தால் உருவாக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் முல்லைத்தீவில் இயங்கும் நல்லாயன் சிறுவர் இல்லங்களிலுள்ள மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
முல்லைத்தீவு சிரேஸ்ட நன்னடத்தை உத்தியோகத்தர் சிவகரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் மாங்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை மரியதாஸ், நல்லாயன் கன்னியர் சபை மாகாண தலைவியின் ஆலோசகர் அருட்சகோதரி சிறியபுஸ்பம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

