மன்னார் VMCT கலைமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட சாதனையாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும் பரிசளிப்பும் கார்த்திகை மாதம் 13ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
VMCT நிறுவன இயக்குனர் திரு. விமலேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட மணிமாஸ்ரர் திருக்குறள் மனனப்போட்டியில் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் VMCTநிறுவன ஆசிரியர்களுக்கான கெரளவிப்பும் மாவட்டத்தில் சர்வதேச ரீதியில் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற மாணவருக்கான கௌரவிப்பும் இடம்பெற்றன.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கனகேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் மடு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி. வலன்ரைன் மற்றும் மன்னார் வலய கல்வி பணிப்பாளர் திரு. செல்வன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்களென பலரும் கலந்துகொண்டனர்.
மாணவர்களுக்கு தமிழ்மொழி மீதான ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கோடு மன்னார் VMCT கலைமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட மன்னார் மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான மணிமாஸ்ரர் திருக்குறள் மனனப்போட்டியில் 270 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

