திருப்பீடத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான தூதரக உறவின் 50ஆவது ஆண்டு யூபிலியை சிறப்பித்து வத்திக்கான் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத்துறையின் செயலர் பேராயர் போல் றிச்சர்ட் காலகர் அவர்கள் இலங்கை நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கார்த்திகை மாதம் 03ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை இலங்கையை வந்தடைந்த பேராயர் போல் றிச்சர்ட் காலகர் அவர்கள் இலங்கை வெளியுறவுத் துறை துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அவர்களால் வரவேற்கப்பட்டு அன்றைய தினம் இலங்கை நாட்டின் பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களை சந்தித்தார்.

தொடர்ந்து 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பேராயர் காலகர் அவர்கள், இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

அத்துடன் பேராயர் அவர்கள் 05ஆம் திகதி புதன்கிழமை 2019ஆம் ஆண்டு, உயிர்ப்பு ஞாயிறு குண்டுதாக்குதல்கள் இடம்பெற்ற இடங்களை பார்வையிட்டதுடன் திருப்பீடத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான தூதரக உறவின் 50 ஆண்டுகளை சிறப்பித்து கொழும்பு புனித லூசியா தேவாலயத்தில் நன்றி திருப்பலி ஒப்புக்கொடுத்து அன்றைய தினம் இலங்கை ஆயர் பேரவை அங்கத்தவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

மேலும் பேராயர் அவர்கள் கண்டியில் உள்ள பௌத்தமத தலைவர்களுடனான பல்சமய சந்திப்புளை மேற்கொண்டதுடன் கண்டி தேசிய குருமடத்தையும் தரிசித்து அங்குள்ள குருமட மாணவர்கள், அருட்தந்தையர்கள் மற்றும் ஆசிரியர்களுடனும் கலந்துரையாடினார்.

By admin