இறந்த அனைத்து விசுவாசிகளையும் நினைவுகூர்ந்து அவர்களுக்காக செபிக்கும் நாளான கார்த்திகை மாதம் 02ஆம் திகதி, யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் மக்கள் கல்லறைகளை தரிசித்து அங்கு இடம்பெற்ற சிறப்புத் திருப்பலிகளில் பங்குபற்றி இறந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபித்தனர்.

யாழ். புனித கொஞ்சேஞ்சி மாதா மறுவாழ்வு முற்றத்தில் மரியன்னை பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற திருப்பலியை குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்கள் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இத்திருப்பலியில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், குருமட மாணவர்கள், இறைமக்களென பலரும் கலந்து இறந்த விசுவாசிகளுக்காக செபித்தனர்.

By admin