யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டதன் 150ஆவது ஆண்டு விழா ஆரம்ப நிகழ்வு கார்த்திகை மாதம் 04ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதிபர் திரு. கு. லெனின்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலியும் பாடசாலை மண்டபத்தில் அரங்க நிகழ்வுகளும் இடம்பெற்றன.

திருப்பலியை பாடசாலையின் பழைய மாணவர்களான கிளறேசியன் சபை அருட்தந்தை ஜே. அருள்ராஜா, செபமாலைதாசர் சபை அருட்தந்தை பேடினன்ட் மற்றும் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை டிலோஜன் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.

தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற அரங்கநிகழ்வில் 150ஆவது ஆண்டு ஞாபக சின்ன அறிமுகமும், கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

கலைநிகழ்வுகளில் கவிதை, பாடல், பேச்சு என்பவற்றுடன் “உலகம் எங்கள் கைகளில்” என்னும் நாடகமும் சிறப்பு நிகழ்வாக மேடையேற்றப்பட்டது.

யாழ். மாவட்ட செயலக பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தரும் பாடசாலையில் பழைய மாணவியுமான திருமதி சக்திஜீபன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin