யாழ். திருமறைக்கலாமன்ற இளையோரவை அங்கத்தவர்களுக்கான பயிற்சி பட்டறை கார்த்திகை மாதம் 05ஆம் திகதி புதன்கிழமை மன்ற கலைத்தூது மணிமண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மன்ற பிரதி இயக்குநர் திரு. ஜோன்சன் ராஜ்குமார் மற்றும் திரு. இரட்ணசிங்கம் ஜெயகாந்தன், திரு. தெய்வீகபாலன் சந்துரு, திருமதி வைதேகி செல்மர் எமில் ஆகியோர் வளவாளர்களாக கலந்து தலைமைத்துவ பயிற்சிகள், கருத்துரைகள், அரங்க பயிற்சிகள், ஆளுமை விருத்தி பயிற்சிகள், குரல்வள பயிற்சிகள் ஊடாக இளையோரை வழிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் 15ற்கும் அதிகமான இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.

