டி லா சால் சபை அருட்சகோதரர் எர்னஸ்ட் தார்சிஸியஸ் அவர்கள் கார்த்திகை மாதம் 04ம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

1976ஆம் ஆண்டு மன்னார் புனித சூசையப்பர் புகுமுகு மடத்தில் இணைந்து 1985ஆம் ஆண்டு தனது இறுதி வாக்குத்தத்தத்தை நிறைவேற்றிய இவர் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் ஆங்கில உதவி ஆசிரியராகவும், பகுதித்தலைவராகவும், மாணவத்தலைவர்களுக்கு பொறுப்பாளராகவும், வத்தளை புனித அந்தோனியார் தேசிய பாடசாலையில் ஆசிரியர் மற்றும் பகுதித்தலைவராகவும் கொழும்பு டி லா சால் கல்லூரியில் ஆசிரியர், பிரதி அதிபர், அதிபராகவும், குருநாகல் புனித அன்னாள் கல்லூரி அதிபராகவும், புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி அதிபராகவும், கொழும்பு முட்வல் டி லா சால் உருவாக்குநர் இல்ல இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

இவரின் பணிவாழ்விற்காக நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin