யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் குருத்துவக் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட “அதிபர் மற்றும் ஆசான்கள் தினம்” கார்த்திகை மாதம் 01ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரி அதிபர் அருள்முனைவர் இருதயநாதர் தயாபரன் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து அன்றைய நாளின் சிறப்பு நிகழ்வாக தனது 50ஆவது அகவையை நிறைவுசெய்யும் அதிபர் அவர்களின் முனைவர்பட்ட ஆய்வு, நூலாக வெளியிடப்பட்டது.
பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் நூலை வெளியிட்டுவைத்தார்.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வரும் புனித சவேரியார் இறையியல் நிறுவகத்தின் இயக்குநருமான அருட்தந்தை ஜெபரட்ணம், குருத்துவ கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், கல்லூரி பணியாளர்கள், குரு மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

