யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து முன்னெடுத்த மறைக்கல்வி கண்காட்சி ஐப்பசி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கண்காட்சியை ஆரம்பித்துவைத்தார்.

இக்கண்காட்சியில் யூபிலி ஆண்டு மற்றும் மீட்பின் வரலாற்று நிகழ்வுகளான காயின் ஆபேல் பலி, நோவாவின் பெட்டகம், ஆபிரகாமின் அழைப்பு, மோசேயின் அழைப்பு, மெசியாவை பற்றிய திருமுழுக்கு யோவானின் அறிவிப்பு, சீனாய் உடன்படிக்கை, இயேசுவின் வாழ்வு, நற்கருணையின் புதுமைகள் என்பன காணொளி ஊடாகவும், மாணவர்களின் ஆற்றுகையூடாகவும்; காட்சிப்படுத்தப்பட்டன.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோரிகள், பங்குமக்கள், அயற்பங்கு மறைக்கல்வி மாணவர்கள், மறையாசிரியர்களென பலரும் பங்குபற்றியிருந்தனர்.

By admin