யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட விஞ்ஞான தினம் ஐப்பசி மாதம் 31ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மன்ற காப்பாளர் ஆசிரியர் திரு. கோபிநாத் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விஞ்ஞான தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் “பரிணாமம்” சஞ்சிகையின் 06ஆவது இதழ் வெளியீடும் நடைபெற்றதுடன் விஞ்ஞான மன்றத்தினரால் உருவாக்கப்பட்ட “இயல் செய்” குறுந்திரைப்படமும் வெளியிட்டுவைக்கப்பட்டது.

“இயல் செய்” குறும்படம் வடமாகாண பாடசாலை விஞ்ஞான மன்றமொன்றினால் வெளியிடப்பட்ட முதல் அறிவியல் புனைகதை குறுந்திரைப்படம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin