யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் அமைந்துள்ள புனித மரியன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா ஐப்பசி மாதம் 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் நடைபெற்றது.
கலாசாலை கிறிஸ்தவ மன்ற காப்பாளர் தனம் பிரபாலினி, கிறிஸ்தவ பாட விரிவுரையாளர்கள் பாலகுமார் மற்றும் பத்மராஜா ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலி நிறைவில் கலாசாலை அதிபர் திரு. சந்திரமௌலீசன் லலீசன் அவர்களின் வாழ்த்துரை நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரிய மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

