கலாநிதி புஸ்பா கிறிஸ்ரி அவர்களின் ‘நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் தமிழ், சமய, சமுகப்பணிகள்’ நூல் வெளியீடு ஐப்பசி மாதம் 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது.
திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குநர் திரு. ஜோன்சன் ராஜ்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து ஆசியுரை வழங்கியதுடன் அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக் அவர்கள் கலந்து வாழ்த்துரையை வழங்கி நூலையும் வெளியிட்டுவைத்தார்.
நூலுக்கான மதிப்பீட்டுரையை யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளரும் எழுத்தாளருமான அஜந்தகுமார் அவர்கள் வழங்கியதுடன் குருமுதல்வர் அவர்கள் முதற் பிரதியையும் பெற்றுக்கொண்டார்.
கனடா நாட்டில் வசிக்கும் கலாநிதி புஸ்பா கிறிஸ்ரி அவர்கள் 15ற்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளதுடன் ‘நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் தமிழ், சமய, சமுகப்பணிகள்’ நூல் அவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட கலாநிதி பட்டத்திற்கான ஆய்வு நூல் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

