மன்னார் மறைமாவட்ட கலையருவி சமுகத்தொடர்பு அருட்பணி மையத்தின் யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வும், கவின்கலை பாடசாலையின் சான்றிதழ் வழங்கும் வைபவமும் ஐப்பசி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கலையருவி மண்டபத்தில் இடம்பெற்றது.
கலையருவி இயக்குநர் அருட்தந்தை லக்ஸ்ரன் டி சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கவின்கலை பாடசாலையில் கற்கைநெறிகளை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யூபிலியை முன்னிட்டு நடாத்தப்பட்ட பாடல் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு என்பவற்றுடன் கவின்கலை பாடசாலை மாணவர்களின் நடனம், மடுமாதா சிறிய குருமட மாணவர்களின் ஊமை நாடகம், பாடல்கள் போன்ற கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ, மன்னார் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம், முருங்கன் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அலெக்சாண்டர் சில்வா வவுனியா மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை டெஸ்மன் அஞ்சலோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் மன்னார் மாவட்ட சிரேஸ்ட கலாசார உத்தியோகஸ்தர் திரு. நித்தியானந்தன், மன்னார் மாவட்ட செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் திருமதி. சுகிர்தா, மன்னார் மாவட்ட செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி. தர்சினி குரூஸ், கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் திரு. பிறின்சிலி மற்றும் செல்வி அருள்மொழி குரூஸ், மன்னார் மாவட்ட செயலக உத்தியோகத்தர் கயல்விழி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், கவின்கலை பாடசாலை மாணவர்கள், பெற்றோர்களென பலரும் கலந்துகொண்டனர்.

