மட்டக்களப்பு மறைமாவட்டம் திருச்சிலுவை திருத்தல துணைப்பங்கான அம்பாறை நாவிதன்வெளி 4ஆம் கொளனி புனித சின்ன மடுமாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை ஜுனோ சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஐப்பசி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அன்றைய தினம் காலை திருச்சிலுவை திருத்தலத்திலிருந்து இறைமக்கள் பாதயாத்திரையாக சின்னமடுமாதா ஆலயத்தை வந்தடைந்து அங்கு சொமஸ்கன் சபை அருட்தந்தை வினோஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருவிழா திருப்பலியில் பங்குபற்றினர்.

