யாழ். கல்வி வலய பாடசாலைகளின் கத்தோலிக்க திருமறை கிறிஸ்தவ பாட ஆசிரியர்களுக்கான 2026ஆம் ஆண்டு கல்வி சீர்திருத்தம் தொடர்பான செயலமர்வு ஐப்பசி மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி சனிக்கிழமை வரை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாண கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இச்செயலமர்வில் யாழ். கல்வி வலய கிறிஸ்தவ பாட ஆசிரிய ஆலோசகர் விக்டோரியா எல்விஸ் பிறஸ்லி, ஆசிரியர்கள் திருமதி தோமஸ் மற்றும் கெனத்மேரி ஆகியோர் வளவாளர்களாக கலந்து புதிய கல்வி சீர்திருத்த அறிமுகம், கற்பித்தல் முறை, மதிப்பீட்டு முறை தொடர்பாக ஆசிரியர்களை வழிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் 2026ஆம் ஆண்டு தரம் 06 மாணவர்களுக்கு கத்தோலிக்க திருமறை கிறிஸ்தவ பாடத்தை கற்பிக்கவுள்ள 60 வரையான ஆசிரியர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin