அமலமரித்தியாகிகள் சபையின் நீதி சமாதான நல்லிணக்க பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் தின நிகழ்வு ஐப்பசி மாதம் 18ஆம் திகதி கடந்த சனிக்கிழமை மன்னார் மறைமாவட்டதில் நடைபெற்றது.

“உலகை வழி நடத்த – அன்பால் போசியுங்கள்” எனும் கருப்பொருளில் பணியக இயக்குனர் அருட்தந்தை ஜீவரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விழிப்புணர்வு பேரணியும் தொடர்ந்து கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

சிறுவர் தொடர்பான விழிப்புணர்வு பதாதைகளை தாங்கி சிறார்களும் பெற்றோர்களும் பங்குபற்றிய பேரணி மன்னார் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஆரம்பமாகி இலுப்பைக்கடவை புனித அந்தோனியார் ஆலயத்தை சென்றடைந்து அங்கு அரங்க நிகழ்வுகளுடன் நிறைவடைந்தது.

அரங்க நிகழ்வில் சிறார்களின் பாடல், கவிதை, நடனங்கள் போன்ற கலைநிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக், அரச உத்தியோகத்தர்கள், அருட்தந்தையர்கள், பணியக இளைஞர் மற்றும் மகளிர் அணியினர், பெற்றோர்கள், சிறார்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin