அமலமரித்தியாகிகள் சபை மூத்த குரு அருட்தந்தை வின்சன் பற்றிக் அவர்களின் “விடியல்” நூல் வெளியீட்டு நிகழ்வு ஐப்பசி மாதம் 23ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மாற்றம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இயக்குனர் திரு. பெனிக்சன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து நூலை வெளியிட்டுவைக்க தேசிய கல்வி நிறுவக வளவாளரும் யாழ். கல்வியியற் கல்லூரி சிரேஸ்ட விரிவுரையாளருமான திரு. தனபாலன் அவர்கள் மதிப்பீட்டு உரையை வழங்கினார்.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் வளர்பிறை இயக்குனர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை சூசை டெமியன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் இந்து மத தலைவர், மேலதிக அரசாங்க அதிபர், அரச உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், மாற்றம் அறக்கட்டளை செயற்குழு அங்கத்தவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் அவலங்களையும் அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைக்கும் வழிகாட்டல் கருத்துக்களை தாங்கியதாக “விடியல்” நூல் அமைந்துள்ளது.

By admin