மறைபரப்பு ஞாயிறை சிறப்பித்து சில்லாலை பங்கின் புனித கதிரை அன்னை மற்றும் யாகப்பர் ஆலய அருட்பணி சபையினர் மற்றும் பக்தி சபையினர் இணைந்து முன்னெடுத்த சந்தை நிகழ்வு ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித கதிரை அன்னை ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புனித வின்சென்ட் டி போல் சபையினரின் செபமாலை கடை ஆசீர்வதித்து திறந்துவைப்பட்டதுடன் சந்தை நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் பங்குமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

இச்செபமாலை கடைக்கான நிதியனுசரணையை லண்டன் நாட்டில் வசிக்கும் திரு. யூட் அவர்கள் வழங்கியிருந்தார்.

By admin