இறை அழைத்தலை ஊக்குவிக்கும் முகமாக திருகோணமலை மறைமாவட்டத்தின் நிலாவெளி மறைக்கோட்ட பங்குகளின் திருப்பாலத்துவ சபை சிறார்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை நிலாவெளி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட பாப்பிறை மறைபரப்பு சபை இயக்குநர் அருட்தந்தை யூட் சர்வானந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து கலைநிகழ்வுகள், கருத்துரைகள் என்பனவும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 100 சிறார்கள் பங்குபற்றியதுடன் குருக்கள், துறவிகளென பலரும் கலந்துகொண்டனர்.

