தேசிய குடும்ப ஆணைக்குழு பொதுக்கூட்டம் ஐப்பசி மாதம் 17, 18ஆம் திகதிகளில் யாழ். மறைமாவட்டத்தில் நடைபெற்றது.
தேசிய குடும்ப ஆணைக்குழுவிற்கு பொறுப்பான காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேய்மன்ட் கிங்சிலி விக்ரமசிங்க அவர்களின் வழிகாட்டலில் தேசிய இயக்குநர் அருட்தந்தை ஜெகான் குணதிலக அவர்களின் தலைமையில் யாழ். மறைமாவட்ட அகவொளி நிலைய இயக்குனர் அருட்தந்தை டேவிட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
முதல்நாள் நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து ஆரம்ப உரையை வழங்கியதுடன் தொடர்ந்து பொதுக்கூட்டம், கடந்த கூட்ட அறிக்கை சமர்ப்பித்தல், கலந்துரையாடல், வெளிக்கள பணயம், திருச்செபமாலை என்பவற்றுடன் மலை மகிழ்வூட்டல் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மாலை நிகழ்வில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
இரண்டாம் நாள் நிகழ்வுகள் 18ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
அன்றைய தினம் ஆயர் பேரருட்தந்தை றேய்மன்ட் கிங்சிலி விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் திருப்பலியும் திருப்பலி நிறைவில் மறைமாவட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு ஆணைக்குழுவின் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆணைக்குழு இயக்குநர்கள், தம்பதிகளென 52 வரையானவர்கள் கலந்துகொண்டனர்.