யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஓர் அங்கமான கத்தோலிக்க வைத்தியர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் White Mass திருப்பலியும் தொடர்ந்து பேராலய மண்டபத்தில் அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் வைத்தியர்கள், வைத்தியர்களின் குடும்ப உறுப்பினர்களென பலரும் கலந்துகொண்டனர்.