குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட பீடப்பணியாளர் வார சிறப்பு நிகழ்வுகள் ஐப்பசி மாதம் 06ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை நடைபெற்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகள், போட்டிகள், சிறப்பு வழிபாடுகள் என்பன நடைபெற்றன.

இறுதிநாள் நிகழ்வுகள் 12ஆம் திகதி நடைபெற்றதுடன் அன்றைய தினம் காலை யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ரவிராஜ் அவர்களின் தலைமையில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து மாலை பீடப்பணியாளர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் பீடப்பணியாளர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin