இளவாலை புனித யாகப்பர் ஆலய மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து முன்னெடுத்த உணவுத்திருவிழா ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி உப அதிபர் அருட்தந்தை சுமன் அவர்கள் கலந்து உணவுத் திருவிழாவை ஆரம்பித்துவைத்தார்.
மாணவர்கள் வகுப்பு ரீதியாக உணவுகளை தயாரித்து விற்பனைசெய்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்கள், அயற் பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.