யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பிரதேசத்தில் சலேசிய டொன் போஸ்கோ சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்பட்டுவரும் அக்சீலியம் ஆங்கில மொழி பாடசாலையின் வருடாந்த கண்காட்சி கடந்த புரட்டாதி மாதம் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை அங்கு நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்சகோதரி அலெக்ஸ்சாண்டர் லில்லி றோஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் கைவண்ணத்தால் உருவான ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கண்காட்சியை ஆரம்பித்துவைத்தார்.

By admin